Ilayaraja - Bharathiraja [FILE IMAGE]
70, 80 காலகட்டத்தில் கொடிகட்டி பறந்தது இளையராஜா – பாரதிராஜா கூட்டணி. கிராமப்புற பின்னணியில் தரமான படங்களை வழங்கியதன் மூலம் அப்போது முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவைவலம்வந்தவர் இயக்குனர் பாரதிராஜா. இப்படி இயக்கத்தில் பாரதிராஜா புகழ் கொடிகட்டி பறக்க, அவரது திரைப்படத்தில் இசையமைத்து அப்போது, இசைஞானி இளையராஜாவும் கொடிகட்டி பறந்தார். இப்படி, இருவருக்குமே சரிக்கு சமம் மவுசு உண்டு.
16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக என்ட்ரி கொடுத்த பாரதிராஜா, இந்த படத்தில் தொடங்கி பாரதிராஜாவின் அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைத்து வந்தார் இளையராஜா.
1977 ஆம் ஆண்டு ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் தொடங்கிய இவர்களது இருவரின் கூட்டணி கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், கொத்த ஜீவித்தலு, நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை என்று ஓயாமல் சென்றது.
ஆனால், யார் கண்ணு பட்டுதொ என தெரியவில்லை, கடைசியாக கடந்த 1992 ஆம் ஆண்டு ‘நாடோடி தென்றல்’ என்ற திரைப்படத்தில் தான் பாரதிராஜா – இளையராஜா கூட்டணி ஒன்றாக இணைந்து பணியாற்றி இருந்தனர்.
ஏன் என்று பார்க்கையில், சில கருத்து வேறுபாடு காரணமாக பாரதிராஜாவும் இளையராஜாவும் தங்கள் நட்புறவை இடையிலே நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. என்ன காரணம் என்று பார்க்கையில், “என்னுடைய இசையில் தான் உன்னுடைய படம் ஹிட், என்னுடைய திரைப்படத்தால் தான் உன்னுடைய இசை ஹிட் என” மாற்றி மாற்றி குறை சொல்லி கொள்வார்கள் என்று சில சினிமா விமர்சகர்கள் பேசுகிறார்கள்.
இப்படி, பாரதிராஜா – இளையராஜா நட்புறவை முறித்துக்கொண்டு பிறகு, தனது படங்களுக்கு கிராமத்து இசைக்காக ஏ.ஆர்.ரகுமானுடன் நம்பிக்கை வைத்து புதிய கூட்டணி வைத்து கொண்டார். கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் முதன் முறையாக இணைந்த கூட்டணி சூப்பர் டூப்பராக அமைந்தது. பாரதிராஜாவின் நம்பிக்கையை உடைக்காமல் மனெக்கெட்டு கிராமத்து பாடல்களை வழங்கினார் ஏ.ஆர்.ரகுமான். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “மானூத்து மந்தையில” பாடல் இன்னும் பட்டிதொட்டி எங்கும் விழாக்களில் ஒலிக்கின்றனர்.
கிழக்குச் சீமையிலே தொடங்கிய பாரதிராஜா – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி தாஜ்மகால், கடல் பூக்கள், காதல் வைரஸ், கண்களால் கைது செய், ஆயுத எழுத்து என தொடர்ந்தது. மனக்கசப்புடன் காலங்கள் உருண்டோட, 31 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பாரதிராஜா-இளையராஜா கூட்டணி. ஆனால், இது வேற ரகம் என்றே சொல்ல வேண்டும். ஆம்….பாரதிராஜா தனது மகன் இயக்கத்தில் “மார்கழி திங்கள்” என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…