leo vijay meesai rajendran [file image]
விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மலையாளம் உள்ளிட்ட பழமொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதமேனன், அர்ஜுன், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இருக்கும் லியோ திரைப்படம் இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்கும் என பலரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
ஜெயிலர் திரைப்படம் திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது . அந்த திரைப்படத்தின் வசூல் சாதனையை ஆயிரம் கோடி வசூல் செய்து லியோ திரைப்படம் கண்டிப்பாக முறியடிக்கும் எனவும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே லியோ திரைப்படம் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடித்தாள் நான் என்னுடைய மீசையை எடுக்கிறேன் என்று கூறியிருந்தார். அதனை பார்த்த விஜய் ரசிகர்கள் பலரும் மீசையை எடுக்க தயாராக இருங்கள் என கூறி வந்தனர். அவர் பேசிய வீடியோவும் மிகவும் வைரலானதால் விஜய் ரசிகர்கள் பலரும் அவரை திட்டி தீர்த்தனர்.
இதனையடுத்து அப்படியே, அந்தர் பல்டி அடிக்கும் வகையில், மீசை ராஜேந்திரன் ஜெயிலர் படத்தின் வசூல் மற்றும் 2.0 வசூல், சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை என அனைத்தையும் முறியடிக்கட்டும் நான் என்னுடைய மீசையை எடுக்கிறேன் என பேசியுள்ளார். லியோ படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் பயம் வந்துவிட்டதோ என மீசை ராஜேந்திரன் பேசியதை வைத்து ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…