actor jai [File Image]
நடிகர் ஜெய் தற்போது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லேபிள் என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். இந்த வெப் தொடர் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஜெய் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஜெய் தனக்கு எந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை என்பது குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” எனக்கு படங்களில் போர் வீரன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை இருக்கிறது. அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். ராஜமௌலியின் மகதீராவின் (மாவீரன்) ஃப்ளாஷ்பேக் பகுதியை நான் மிகவும் விரும்பினேன். அதைப் பார்த்ததில் இருந்தே எனக்கு அப்படியொரு வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
அந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் என்று பலமுறை யோசித்து பார்த்திருக்கிறேன். அந்த மாதிரி கதைகள் கொண்ட படங்களில் நடிக்க வாய்ப்பு வருமா என்றும் நான் ஆவலுடன் இருக்கிறேன். அந்த மாதிரி கதைகள் கொண்ட படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது என்றால் கண்டிப்பாகவே நடிப்பேன்.” என தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய நடிகர் ஜெய் ” நயன்தாராவுடன் நடிக்கும் அனுபவம் குறித்து பேசியுள்ளார். நான் நயன்தாராவுடன் அன்னபூரணி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறேன். இந்த திரைப்படம் முற்றிலும் பெண்ணை மையப்படுத்திய படமாக இருக்கும். படத்தில் என்னுடைய கதாபாத்திரமும் பெரிதளவில் பேசப்படும்’என கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய நடிகர் ஜெய் ” காமெடி, எமோஷன் மற்றும் ஆக்ஷன் போன்ற நடிப்பின் பல்வேறு அம்சங்களுக்கு எனது முழுத் திறனையும் வழங்க விரும்புகிறேன். இன்றுவரை நான் பல படங்களில் நடித்து இருக்கிறேன். ஆனால், எனது எந்த திரைப்படத்திலும் நான் முழுமையாக நன்றாக நடித்து இருக்கிறேன் என திருப்தி அடையவில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…