Chandramukhi2 [File Image]
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவி மரியா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சந்திரமுகி 2’ திரைப்படம் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படமாகும்.
அப்போது, இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்நிலையில், முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, இன்று சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் மாலில் நடந்தது. இதில், படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது, இப்படத்தின் டிரைலரை வெளியிட்டது படக்குழு. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது.
டிரைலரை வைத்து பார்க்கும்பொழுது, முதல் பாகத்தை போலவே நகைச்சுவை, நடனம், ஆக்ஷன் என அனைத்தும் பிரமாதமாக அமைந்துள்ளது. வடிவேலு தனது கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். வேட்டையனாக ராகவா லாரன்ஸ் மிரட்ட சந்திரமுகியாக கங்கனா ரனாவத் அழகாக நடித்திருக்கிறார்.
அண்மையில், படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடலான ஸ்வகத்தாஞ்சலி படக்குழு வெளியிட்டது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கழித்து 2-ம் பாகம் உருவாகியுள்ளது. தற்போது, சந்திரமுகியின் இரண்டாம் பாகம் வரும் 15-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…