தல 60 படத்தின் இசையமைப்பாளர் இவரா?

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. தற்போது இவர் எச்.வினோத் இயக்கத்தில், நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தல 60 படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளதாக, தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும், ஏ.ஆர்.ரஹுமானிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.