naga chaitanya second marriage [file image]
ஹைதராபாத் : சினிமாவில் திருமணம் முடிந்து பிறகு விவாகரத்து செய்துகொண்டு இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் விஷயம் ஒன்றும் புதிது இல்லை. அப்படி தான் நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவரும் சில ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்த நிலையில் இடையில் யார் கண்ணு பட்டதோ இருவருக்கும் இடையே கருது வேறுபாடு ஏற்பட்டு 2021-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று கொண்டார்கள்.
விவாகரத்துக்கு பிறகு நடிகை சமந்தா தொடர்ச்சியாக அவருடைய படங்களில் கவனம் செலுத்தி கொன்டு இருந்தார். மற்றோரு பக்கம் அவருடைய முன்னாள் கணவர் நாக சைதன்யாவும் தன்னுடைய படங்களில் கவனம் செலுத்தினார். இருப்பினும் நடிகையுடன் டேட்டிங் செய்து வரும் வதந்தி தகவல் ஒன்றிலும் அவர் சிக்கியது அனைவர்க்கும் தெரியும்.
அந்த நடிகை வேறு யாரும் இல்லை…பொன்னியின் செல்வன் படத்தில் வானிதி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சோபித துலிபாலா தான். இவரும், நாக சைதன்யாவும் ஒன்றாக டேட்டிங் செய்து வந்ததாக தீயான தகவல் ஒன்றும் மிகவும் பரவியது. இருப்பினும், இது உண்மை இல்லை என்பது போல சோபித துலிபால தெரிவித்து இருந்தார்.
இப்படியான சூழலில், அடுத்ததாக ஒரு தகவல் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது. அது என்னவென்றால், சோபித துலிபாலா மற்றும் நாக சைதன்யா இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார்களாம். திருமணத்திற்கு முன்பு இந்த ஜோடி இன்று ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஹைதராபாத்தில் ஒரு தனியார் விழாவில் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளவுள்ளதாகவும் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
இருவரும் தங்கள் உறவு பற்றியும், திருமணம் மற்றும் நிச்சியம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், நம்பத்தக்க சினிமா வட்டாரத்தில் இந்த தகவல் உண்மை என கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. மேலும், நடிகரும் நாகசைதன்யாவின் தந்தையுமான நாகார்ஜுனா அவர்களின் நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும், அவர்களின் இல்லத்தில் நடைபெறும் விழாவிற்குப் பிறகு இருவரும் புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…