sona actress [File Image]
தமிழ் சினிமாவில் “பூவெல்லாம் உன் வாசம்” எனும் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் சோனா ஹெய்டன். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஷாஜகான், பொன் மேகலை, கேல்விக்குறி, மிருகம், குசேலன், குரு என் ஆளு, சொக்கலி, நினைவில் நின்றவள் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் பெரும்பாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடுத்த காரணத்தால் தொடர்ச்சியாக இவருக்கு கவர்ச்சி வேடங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
பிறகு தொடர்ச்சியாக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் மட்டுமே இவர் நடித்து வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் தொடர்ச்சியாக கவர்ச்சியான வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததால் பிறகு சின்னத்திரையில் சில சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்கள் மற்றும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சோனா தன்னுடைய பயோபிக் வெப் சீரிஸ் ஆகா எடுக்க அதற்கான கதையை தான் தயார் செய்து இருப்பதாகவும், கவர்ச்சி நடிகையாக இருக்க ரொம்ப கஷ்டமாக இருக்கு என சற்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கவர்ச்சி நடிகை பிம்பத்தை மாற்றவேண்டும்
பேட்டியில் பேசிய நடிகை சோனா ” நான் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே தொடர்ச்சியாக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வந்த காரணத்தால் என்னை கவர்ச்சி நடிகை என்றே முத்திரை குத்திவிட்டார்கள். அந்த பிம்பத்தை மாற்ற நான் மிகவும் சிரமைபட்டேன். கவர்ச்சி நடிகையாகவே இருக்க மிகவும் கஷ்டம் இதனை உடைத்தெறியவேண்டும் என்பதற்காகவே சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தேன் ” என தெரிவித்துள்ளர்.
என்னுடைய தவறு தான்
நான் இதனை வருடங்கள் ஆகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறேன். அதற்கு காரணம் என்னவென்று சரியாக தெரியவில்லை. எனக்கு கல்யாணம் செய்யமுடியவில்லை என்று நினைக்கும்போதெல்லாம் எதோ ஒரு தவறு செய்துவிட்டமோ என்று தோணும். ஆரம்பத்தில் இருந்து சரி இப்போது வரை என்னை ஒரு கவர்ச்சி நடிகையாகத்தான் அனைவரும் பார்க்கிறார்கள். அது என்னுடைய தவறுதான்” என கூறியுள்ளார்.
இயக்குனர் அவதாரம் எடுத்த சோனா
நடிகையாக கலக்கி வந்த சோனா தற்போது ஒரு வெப் சீரியஸை இயக்குவதன் மூலம் இயக்குனராக களமிறங்கவுள்ளார். ஷார்ட் ஃபிளிக்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இந்த வெப் சிரியஸை தயாரிக்கவும் செய்து இருக்கிறார். இதற்கான கதையையும் அவரே எழுதி இருக்கிறார்.
வெப் சீரிஸை இயக்குவது பற்றி சோனா
எனக்கு இந்த கதையை எழுதியவுடன் இதனை பல சீசன்கள் கொண்ட ஒரு வெப் தொடராக எடுக்கலாம் என ஆசை வந்தது.கதையை பற்றி எனக்கு தெரிந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் பேசினோம் அவர்களும் கதையை கேட்டுவிட்டு நன்றாக இருப்பதாக கூறினார்கள். பிறகு கதையை கேட்டுவிட்டு ஷார்ட் ஃபிளிக்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க முன் வந்ததது” எனவும் சோனா தெரிவித்துள்ளார்.
மேலும், சோனா தயாரித்து இயக்கும் இந்த வெப்சீரிஸ்-க்கு “ஸ்மோக்(Smoke)” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பும் நாளை முதல் தொடங்கப்படவுள்ளது. விரைவில் இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் மற்ற விவரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…