Jigarthanda Teaser - VJAY [File Image]
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள ‘ஜிகர்தண்டா 2’ டீசரை படக்குழு நேற்று வெளியிட்டனர். எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம், சித்தார்த் மற்றும் பாபி சிம்ஹா நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தின் தொடர்ச்சியாகும்.
டீசரின் தொடக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ஒரு திரைப்பட இயக்குனராக காட்பட்டுள்ளார், “ரோல் கேமரா, சவுண்ட் மற்றும் ஆக்ஷன்” என்ற வார்த்தைகளுக்கு இடையேயான ஆக்ஷன் சீக்வென்ஸின் இன்டர்கட்கள் பக்க பலமாக அமைந்துள்ளது. இதில், ராகவா லாரன்ஸ் ஒரு மோசமான கேங்க்ஸ்டராக இன்ட்ரோ கொடுக்கிறார்.
இப்படி ஒவ்வொரு கட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது, இந்நிலையில், டீசர் வெளியாகி கடந்த 24 மணி நேரத்தில் (ஒரே நாளில்) 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது. அந்த வகையில், விஜய்யின் மாஸ்டர் (19 மில்லியன்) சர்கார் (14 மில்லியன்) மெர்சல் (11 மில்லியன்) இந்த படங்களின் ஒரு நாள் சாதனையை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டீசர் பீட் செய்துள்ளது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் முடிவடைந்து இந்த ஆண்டு தீபாவளி அன்று படம் திரைக்கு வரவிருக்கிறது. முதல் பாகத்தையும் இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
மேலும், இப்படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு ஷபீக் முகமது கவனிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் & ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் பேனர்களின் கீழ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் ஆகியோர் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…