LeoThirdSingle [File Image]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் கடந்த 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. டிரைலரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.
அந்த வகையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. வெளிநாடு ப்ரோமோஷன் பணியின்போது, முக்கிய சர்ப்ரைஸ் ஒன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ப்ரோமோஷன் துபாயில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், ப்ரோமோஷன் பணிகள் நடைபெறாமல் படத்திற்கான எதிர்பார்ப்பு பிரம்மாண்டமாக உள்ளது. ஏற்கனவே, படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களான ‘நான் ரெடி’, Badass ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.
இந்நிலையில், படத்தின் மூன்றாவது சிங்கிள் குடும்பப் பாடலாக இருக்கும் என்றும் அது அக்டோபர் 9 ஆம் தேதி நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என்று தகவல் வெளியனாது. ஆனால், அதற்கான ஒரு அறிவிப்பு கூட இன்று வெளியாகவில்லை.
நாளை மூன்றாவது சிங்கிள் வெளியாகும் என்றால், அதற்கான ஒரு அறிகுறி கூட தெரியவில்லை. மூன்றாவது சிங்கிள் குறித்த போஸ்டர் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னும் ஒரு அறிவிப்பு கூட வெளியாகவில்லை என்பதால், நாளை மூன்றாம் பாடல் வெளியாகுமா? ஆகாதா? என சந்தேகமும் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 21-ஆம் தேதி லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள…
மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கால் விரலில்…
லண்டன் : இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி…
தூத்துக்குடி : மாவட்டத்தில் ஆகஸ்ட் 5, 2025 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை, பனிமய மாதா திருத்தலப்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமார், நகைத் திருட்டு புகாரில் காவல்துறையினரால்…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், ஓல்டு ட்ராஃபோர்டில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின்…