Categories: சினிமா

மாமன்னன் தடை கோரிய வழக்கு… சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.!

Published by
Muthu Kumar

மாமன்னன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் உதயநிதி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படமான மாமன்னன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணையில் நடிகர் உதயநிதி, ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனம் பதில் அளிக்குமாறு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஏஞ்சல் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான உதயநிதி, அத்திரைப்படத்தில் முழுவதும் நடித்துக் கொடுப்பதற்குள் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டார், மேலும் இது தனக்கு கடைசி படம் எனவும் அமைச்சரான பிறகு உதயநிதி தெரிவித்தார். இதனையடுத்து ஓடிஎஸ் படத்தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ராம சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில், மாமன்னன் படத்தை தடை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஏஞ்சல் திரைப்படம் 80% சதவீதம் முடிந்துள்ளது, மீதமுள்ள 20% சதவீத பணியும் முடித்துக்கொடுக்குமாறும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்த வழக்கில், வரும் ஜூன் 28க்குள் உதயநிதி, மற்றும் ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனமும் பதில் விளக்கம் தருமாறு உத்தரவிட்டுள்ளார்.

Published by
Muthu Kumar

Recent Posts

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

26 minutes ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…

1 hour ago

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…

1 hour ago

பாகிஸ்தானில் பாயும் இந்திய நதி நீர்! திடீர் மழையால் தண்ணீர் திறப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…

1 hour ago

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

2 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

3 hours ago