Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்ற சூழல் முதல் சர்வதேச நிகழ்வுகள் வரை பல்வேறு செய்திகளை இதில் காணலாம்.

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தொடர்ந்து 3வது நாள் இரவாக நேற்று வரை பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து வருகிறது. அதனை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வருகிறது. அதேபோல பாகிஸ்தான் விமான தளங்களின் மீது இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றத்தை தடுக்க பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றத்தை தணிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் என அமெரிக்க வெள்ளை மாளிகை ஊடக பிரிவு செயலாளர் கரோலின் லிவிட் கூறியுள்ளார். இரு நாட்டு தலைவர்களுடனும் டிரம்ப் நல்ல நட்புறவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025