டெல்லி :இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம் அந்த வகையில், S-400 அமைப்பு அழிக்கப்பட்டதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன. S-400 அமைப்பு முற்றிலும் பாதுகாப்பானது, அதற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று இந்திய பாதுகாப்புத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
பிரிக்ஸ் செய்திகளால் பகிரப்பட்ட ஒரு பதிவில், S-400 பாகிஸ்தான் ஆயுதப் படைகளால் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது, அது முற்றிலும் போலியானது என்று மத்திய அரசு சார்பில் உண்மையை கண்டறியும் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) விளக்கம் கொடுத்துள்ளது.
சுதர்சன் சக்ரா என்று அழைக்கப்படும் இந்தியாவின் S-400, இந்திய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்து முற்றிலுமாக அழித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node400 சுதர்சன் சக்ரா அமைப்பு:
ரஷ்ய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு என்பது உலகின் மிகவும் மேம்பட்ட ஒரு நீண்ட தூர வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்று.
600 கி.மீ. தொலைவில் வரும் ஏவுகணைகள், ட்ரோன்களை ட்ராக் செய்து, அவை 400 கி.மீ. தொலைவில் வரும்போது தாக்கி அழிக்கும்.
அனைத்து விதமான போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கூட இடைமறித்து அழிக்கக்கூடியது.
மிஸைல் லாஞ்சர் (Missile Launchers), சக்திவாய்ந்த ரேடார், கமாண்ட் சென்டர் (Command Centre) 3 பாகங்களைக் கொண்டது.
