mansoor ali khan [File Image]
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் திரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். சமீபத்தில், மன்சூர் அலி கான் யூடியூப் பேட்டியின் போது நடிகை த்ரிஷாவை அவமதிக்கும் வகையில் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திரையுலகினர் மத்தியில் பலத்த எதிர்ப்பு உருவானது.
நடிகை த்ரிஷா இது குறித்து கண்டனம் தெரிவித்து இருந்தார். தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர் குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். இது தொடர்பாக, சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகை குறித்து அவதூறு பேசியதாக மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டு இருந்தது.
இது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். திரிஷா குறித்து அவதூறு பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். த்ரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார். இருந்தும், நடிகை த்ரிஷாவும் இது குறித்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நேரில் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடிகை த்ரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர் என கூறி திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோர் தலா 1 கோடி அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார்.
ஹிட் படத்தில் நடிக்க சம்பளம் வாங்காத விஜயகாந்த்! எந்த படத்துக்காக தெரியுமா?
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஸ்குமார் தலைமையிலானா அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில், பொதுவெளியில் பிரபல நடிகையைப் பற்றி மன்சூர் அலிகானின் தரக்குறைவான கருத்துக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவருக்குத் தெரிய வேண்டும் என்றார். அது மட்டும் இல்லாமல், நியாபடி பார்த்தால் மன்சூர் அலிகான் பேசியதற்காக நடிகை த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என்றும் மன்சூர் அலிகான், தொடர்ச்சியாக சர்ச்சை செயல்களில் ஈடுபடுகிறார் என்று சுற்றி காட்பட்டது.
இதனையடுத்து, தாம் பேசியது தொடர்பாக முழு வீடியோவையும் தாக்கல் செய்வதாகவும், தம்மை பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டதை த்ரிஷா நீக்க வேண்டும் என மன்சூர் அலிகான் தரப்பு வாதம் முன் வைக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட திரிஷாவே அமைதியாக உள்ள நிலையில் தற்போது எதற்காக மன்சூர் வழக்கு தொடர்ந்துள்ளார் என தெரியவில்லை என திரிஷா தரப்பு தங்கள் வாதத்தை முன் வைத்தனர். இந்நிலையில், மன்சூர் அலிகான் மனு குறித்து நடிகைகள் த்ரிஷா மற்றும் குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…