anushka shetty marriage [file image]
நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை அனுஷ்கா இருவரும் பாகுபலி படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள். படத்தில் இவர்களுடைய கெமிஸ்ட்ரியும் அற்புதமாக இருந்திருக்கும். இந்த படத்தை பார்த்த பலரும் இருவரும் நிஜமாகவே ஜோடி சேர்ந்தால் நன்றாக இருக்கும் எனவும் ரசிகர்கள் ஆசைப்பட்டது உண்டு. ரசிகர்கள் ஆசைப்பட்டது போலவே இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும் அந்த சமயமே மிகவும் தகவல் பரவியது.
ஆனால், இவருமே தங்கள் இருவரும் காதலிக்கும் செய்திகள் குறித்து பேசவே இல்லை. இந்த நிலையில், அடிக்கடி அனுஷ்கா திருமணம் குறித்த தகவலும், பிரபாஸ் திருமணம் குறித்த தகவலும் பரவி வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது ஒரு செய்தி மிகவும் வைரலாகி கொண்டு இருக்கிறது. அது என்னவென்றால், பிரபாஸ் குடும்பம் அவரை அனுஷ்காவை திருமணம் செய்ய கூறி வற்புறுத்தி வருகிறதாம்.
ரீ -என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா.! புது படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!
பிரபாஸிற்கு வயதும் ஆகி கொண்டே இருக்கும் காரணத்தால் அவர் அனுஷ்காவை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆனால் நன்றாக இருக்கும் என பிரபாஸின் குடும்பம் விரும்புகிறதாம். இதனால் விரைவில் பிரபாஸிற்கு திருமணம் செய்து வைக்கவும் அவருடைய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாகவும் ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இருப்பினும் இது வதந்தி தகவலா அல்லது உண்மை தகவலா என பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரும் மனம் திறந்து பதில் அளித்தால் தான் தெரியவரும். இருப்பினும் பெரிய அளவில் வதந்தி தகவலுக்கு எல்லாம் அனுஷ்கா பதில் அளித்து இல்லை இருந்தாலும் அவருடைய திருமணம் பற்றிய தகவல் இப்படி பரவி வருவதன் காரணமாக அவரும் இது பற்றி விளக்கம் அளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், நடிகை அனுஷ்கா தற்போது மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதைப்போல பிரபாஸ் தற்போது சலார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய அளவில் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சலார் திரைப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…