Adipurush Twitter review [file image]
ராமாயண காவியத்தை அடிப்படையாகக் கொண்ட புராண கதையை தழுவி எடுக்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படம் இறுதியாக இன்று 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஓம் ராவுத் OmRautஇயக்கிய இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், கிருத்தி சனோன் சீதையாகவும், சன்னி சிங் லட்சுமணனாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர்.
தற்போது, இப்படம் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது போல் தெரிகிறது. சர்ச்சைக்கும் எதிர்பார்ப்புக்கும் மத்தியில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படத்தை காண பலரும் திரையரங்குக்கு குவிந்தனர். ஆதிபுருஷ்’ பாக்ஸ் ஆபிஸில் பிரமாண்ட வசூலை ஈட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் முன்பதிவில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.
இதன் பாடல்கள் மற்றும் பின்னணி இசை நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. இருப்பினும், படத்தின் இரண்டாம் பாதி மெதுவாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்:
ட்விட்டர் விமர்சனம்:
ஒரு பயனர், சில திரைப்படங்கள் மதிப்பிடப்படக் கூடாது, ஆனால் பாராட்டப்பட வேண்டியவை. ஆதிபுருஷ் இந்த நவீன உலகத்திற்கான படம். இழுத்தடிக்கப்பட்ட இரண்டாம் பாதியைத் தவிர, திரைப்படம் ரசிகர்களுக்கு போதுமான கூஸ்பம்ப்ஸ் தருணங்களைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர், கிளைமாக்ஸில் சில பிரேம்கள் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. ஒரு காவியக் கதை பிரமாண்டமான முறையில் சொல்லப்பட்டுள்ளது. முக்கிய கதாபாத்திரங்களின் நடிப்பு மிகவும் நன்றாக உள்ளது. BGM தரமானது…. என்று குறிப்பிட்டுள்ளார்.
இசை மற்றும் பாடல்கள். VFX பிக் லெட் டவுன். இரண்டாம் பாதியில் எமோஷனல் கனெக்ட் இல்லை. மொத்தத்தில் பார்க்க வேண்டிய நல்ல படம்.
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…