Kanguva Fan Made Posters [Image source : file image]
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்.
இந்த கங்குவா திரைப்படம் அடுத்த ஆண்டு கிட்டத்தட்ட 10 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இருக்கிறார்கள். படத்தில் இருந்து சில போஸ்டர்கள் வெளியிடப்பட்டும் இன்னும் சூர்யாவின் முகத்தை காட்டாமல் படக்குழு ட்ரைலரில், அல்லது பர்ஸ்ட் லுக் போஸ்டரில் காமிக்கலாம் என சஸ்பென்சாக வைத்துள்ளார்கள்.
இதற்கிடையில், சூர்யாவின் முகம் படத்தில் இப்படி தான் இருக்கும் என கற்பனை செய்து ரசிகர் எடிட் செய்த சில ‘கங்குவா’ படத்தின் போஸ்ட்டர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டர்களை பார்த்த நெட்டிசன்கள் “நம்ம சூர்யா மிரட்டலா இருக்காரே” என கூறி வருகிறார்கள்.
மேலும் கங்குவா திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியுடன் மற்ற அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…