kamal hassan [File Image]
இந்திய சினிமாவின் உலக நாயகன் என்ற அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் ‘விக்ரம்’ திரைப்பட வெற்றிக்குப் பிறகு பிஸியாகிவிட்டார். பல்துறை திறமை கொண்ட இவர் வித்தியாசமான படங்களை வழங்கி ரசிகர்கள் மனதை கொள்ளயடித்துவிட்டார்.
தற்போது, அவர் பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மெகா-பட்ஜெட் படமான ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘ப்ராஜெக்ட் கே’ படத்தில் கமல்ஹாசன் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு சுவாரஸ்யமான டீஸருடன் வெளியிடப்பட்டுள்ளது.
நீண்ட நாட்கள் கழித்து இந்த படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறராம். இந்நிலையில், இதற்கு முன்னதாக அவர் வில்லனாக கலக்கிய கதாபாத்திரங்களை ஒரு பார்வை பார்க்கலாம்.
தசாவதாரம்:
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘தசாவதாரம்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் 10 விதமான வேடங்களில் நடித்தார். இப்படத்தில் கமல்ஹாசன் ஹீரோ மற்றும் வில்லன் ஆகிய இரு வேடங்களில் நடித்திருந்தாலும், எட்டு வெவ்வேறு துணை வேடங்களில் நடித்திருந்தாலும், அதில் ஃபெட்சராக கமல் நடித்த வில்லன் பாத்திரம் ஒரு முக்கிய கவனம் ஈர்த்தது.
இந்தியன்:
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ‘இந்தியன்’ இப்படத்தில் கமல், ஊழலுக்கு எதிராக போராடும் வில்லன் தாதாவாக கலக்கினார். கமல்ஹாசனின் இதுவரை இல்லாத கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்பொது, வெளியீட்டுக்குத் தயாராகி வரும் படத்தின் இரண்டாம் பாகம், அதை விட பத்து மடங்கு பெரியதாக இருக்கும்.
ஆளவந்தான்:
சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய ‘ஆளவந்தான்’ படத்தில் கமல்ஹாசன் இரட்டை சகோதரனாக நடித்திருந்தார். படுத்தில் அவர் ஹீரோ மற்றும் வில்லன் வேடங்களில் கலக்கினார். கமல்ஹாசன் எழுதிய ‘தாயம்’ நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், வெவ்வேறு கொள்கைகளைப் பின்பற்றும் இரட்டை சகோதரர்களின் மோதலைப் பற்றியது.
சிகப்பு ரோஜாக்கள்:
பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘சிகப்பு ரோஜாக்கள்’ என்ற உளவியல் த்ரில்லர் திரைப்படத்தில் கமல்ஹாசன் ஒரு சைக்கோ கொலையாளியாக எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்தார். 1978 ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது, மேலும் கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்று தந்தது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…