Vignesh Shivan [File Image]
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தராவின் தாயார் ஓமனா குரியனின் பிறந்தநாளுக்கு இயக்குனரும் நயனின் கனவருமான விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகை நயனின் தாயார் ஓமனா குரியனின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்தனர். அதில், விக்னேஷ் சிவன் இன்ஸ்டகிராம் பக்கத்தில், தனது மாமியாரின் புகைப்படங்களை வெளியிட்டு, உருக்கமான அன்பு குறிப்புடன், நயன்தாராவின் தாயை தனது இரண்டாவது தாய் மற்றும் அவரது குடும்பத்தின் மிகப்பெரிய பலம் என்று குறிப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அடிக்கடி, தனது மனைவிக்கு அன்பு குறிப்பை பகிர்ந்து கொள்ளும் விக்னேஷ் சிவன், முன்னதாக அன்னையர் தினத்தை முன்னிட்டு, தனது மாமியாரை வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த வருடம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர், தம்பதியினர் வாடகை தாய் மூலம் இரட்டை மகன்கள் பிறந்ததை அறிவித்தனர். நயன்தாரா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்தார். அதில், தனது இரட்டை குழந்தை உடன் இருக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். நயன்தாரா நேற்று தங்கள் சொந்த தோல் பராமரிப்பு பிராண்டான 9 SKIN என்ற நிறுவனத்தை அறிவித்தார். இந்த பிராண்ட் இம்மாதம் 29ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
விக்னேஷ் சிவன் கடைசியாக ஜெயிலர் படத்தில், ‘ரத்தமாரே’ என்ற பாடலை எழுதினார். மறுபக்கம், நயன்தாரா ஜவான் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அடுத்ததாக ஜெயம் ரவியுடன் இறைவன் படத்தில் நடிக்கிறார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…