WikkyNayan [File Image]
அண்மையில் நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கினார். அவருக்கு தற்பொழுது, 3 மில்லியன் ஃபாளோயர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராம் தொடங்கியதிலிருந்து நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் தனது குழந்தைகள் புகைப்படங்கள், கணவருடனான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நயன்தாரா தற்போது 22 பிரபலங்களை பின்தொடர்கிறார்.
அந்த வகையில், இன்று காலங்காத்தாலே தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் ரொமன்ஸ் காதல் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் இருவரும் அழகான சூரிய அஸ்தமனப் பின்னணியில், தங்கள் தலையையும் மூக்கையும் ஒருவருக்கொருவர் நெருக்கமாகக் கொண்டு போஸ் கொடுப்பதைக் காணலாம்.
இதற்கிடையில், ஷாருக்கான் உடன் நயன்தரா நடிப்பில் இன்று வெளியான அவரது முதல் பாலிவுட் படமான ‘ஜவான்’ ரிலீஸுக்கு விக்னேஷ் சிவன், தங்கமே என்று தனது மனைவிக்கு வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார். இன்று வெளியான ஜவான் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
நேற்றைய தினம் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோகுலாஷ்டமி விழாவாக நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தநிலையில், நயன்தாரா தனது குழந்தைகள் கிருஷ்ணன் வேடமணிந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…