Otha Votu Muthaiya [file image]
ஒத்த ஓட்டு முத்தையா : நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் புதிய படமான “ஒத்த ஓட்டு முத்தையா” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
போஸ்டரில், பதவி ஏற்பு விழா என்றும், மிக விரைவில் பொதுமக்களையும் சந்திக்க உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுந்தரி நீயும் சுந்தரன் நானும், கிச்சா வயசு 16 ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சாய் ராஜகோபால் தான் இந்த படத்தை இயக்குகிறார். தற்பொழுது, கவுண்டமணி ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் ரிலீஸுக்கு காத்திருகிறார்.
இது ஒரு குடும்ப மற்றும் அரசியல் நையாண்டி கலந்த நகைச்சுவை கலந்த படமாகும். கவுண்டமணி அரசியல்வாதியாகவும், மூத்த சகோதரனாகவும் நடிக்கிறார், அரசியலில் வெற்றி பெற்று, அவர் தனது மூன்று சகோதரிகளை திருமணம் செய்து வைக்கிறாரா என்பதே படத்தின் கதை.
இப்படத்தில் யோகி பாபுவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும்,மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கமுத்து, சதீஷ் ஆகியோர் துணை நடிகர்களாக நடித்துள்ளனர். படத்தை ஷஷி பிலிம்ஸ் தயாரிக்க, படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.
மேலும், இப்படத்திற்கு ஹெக்டர் ஒளிப்பதிவு செய்ய, ராஜா சேதுபதி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு, கவுண்டமணி நடிக்க தொடங்கியுள்ளார். இவர் கடைசியாக 2016 ஆம் ஆண்டு எனக்கு வேறு எங்கும் கிடையாது படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…