தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2′ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி ஆகியோர் நடித்து வருகிறார்கள். தற்போது மேலும் ஒரு கதாநாயகியாக வித்யா இணைந்திருக்கிறார். நடிகை வித்யா, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘பசங்க 2’ படத்தில் நடித்துள்ளார். ‘மாரி 2’ நடிப்பதை வித்யாவே உறுதி செய்திருக்கிறார். இப்படத்தில் சாய் பல்லவி ஆட்டோ ஓட்டுநராகவும், வரலட்சுமி கலெக்டராவும் நடிக்கிறார்கள். மேலும் […]
நடிகர்கள் சல்மான்கான், அக்ஷய்குமார், ரன்வீர்சிங், நடிகைகள் சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் ஆகியோர் கலை நிகழ்ச்சி நடத்த பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகர கோர்ட்டில் தனியார் நிறுவனம் ஒன்று நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- “அமெரிக்காவில் 100 ஆண்டு இந்திய சினிமாவை கொண்டாடும் வகையில் 2013-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்தோம். அதில் கலந்துகொண்டு நடனம் […]
கடந்த ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் பெரும்பாலான குடும்பங்களை ஆக்கிரமித்துக் கொண்டன. நாளுக்கு நாள் வெளியில் இந்த நிகழ்ச்சிக்கான எதிர்ப்பு போராட்டங்கள் அதிகரித்ததை தொடர்ந்து தமிழகத்தின் செய்தி ஊடகங்களில் பிக் பாஸ் விவாதப் பொருளானது. அவ்வப்போது தனது அரசியல் கருத்துகளை மேடையில் பேசிய கமல்ஹாசன் இன்று மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிவிட்டார். அப்படி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ், ஓவியா, காயத்ரி ரகுராம், ஸ்ரீ, ரெய்ஸா, […]
சீரியல் மோகத்திற்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது என்பது போலாகிவிட்டது. அதிலும் பாம்புகளை வைத்து மாயாஜால வித்தை செய்யும் சீரியல்களுக்கு பெரும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதில் ஒன்று நாகினி. ஒன்று, இரண்டு என இப்போது மூன்றாவது சீசனை எட்டிவிட்டது. அண்மையில் இந்த சீசன் 2 ஹிந்தியில் ஒளிபரப்பாக தொடங்கியது. இதில் நடிகை ஏக்தா கபூர் நடித்திருக்கிறார். மேலும் கரிஷ்மா தன்னா, அனிதா ஹாசானந்திஆகியோர் நடித்துள்ளனர். இந்த காம்பினேஷனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தொலைக்காட்சியின் முக்கிய அங்கமான BARC வெளியிட்ட தகவலின் […]
சந்தைக்கு எந்த புதிய மாடல் மொபைல் வந்தாலும் அதை வாங்க நடிகர், நடிகைகள் தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் அஜித் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இன்று ஆளாளுக்கு ஸ்மார்ட் போன் வைத்துள்ள சூழலில் அஜித் கேமராகூட இல்லாத மிகச்சிறிய பேசிக் மாடல் மொபைல் போனைத்தான் பயன்படுத்துகிறாராம். ‘சார் உங்கள் முன்னால் ஐபோன் எடுத்துப் பேசவே கூச்சமாக இருக்கிறது’ என்று சொன்ன தயாரிப்பு நிர்வாகியிடம், ‘அதைப் பயன்படுத்தவேண்டிய அவசியமும் தேவையும் உங்களுக்கு இருக்கு. ஆனால் வீட்டில் இருந்து […]
தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலுமே பிரபலமான நடிகை நஸ்ரியா நசீம், கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்டு 21ம் தேதி திருமணம் செய்துகொண்டார். நடிகர் ஃபகத் ஃபசில் மற்றும் நடிகை நஸ்ரியா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இருவரின் திருமணத்திற்கு பிறகு, 4 ஆண்டுகள் இடைவேளையைக் கடந்து தற்போது மீண்டும் நடிப்பில் கால் பதித்துள்ளார் நஸ்ரியா. இயக்குநர் அஞ்சலி மேனன் இயக்கும் ‘கூடே’ படத்தில் நடித்துள்ளார் நஸ்ரியா. பிற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் ப்ரித்விராஜ், நடிகை […]
மலேசியா வாசுதேவன், இவர் பெயரை சொன்னதுமே சில பாடல்கள் நம் நினைவுக்கு வந்துவிடும். அந்த அளவிற்கு தனித்தன்மை வாய்ந்த கண்ணியமான குரலுக்கு சொந்தக்காரர் இவர். பாடல் பாடுவதை தாண்டி நிறைய படங்களில் வில்லனாகவும் கலக்கியுள்ளார். பல திறமைகளை வெளிக்காட்டி மக்களின் ஆதரவை பெற்ற இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றே கூறலாம். இந்த வருத்தம் வாசுதேவன் அவர்களின் குடும்பத்தாருக்கு இருக்கிறது. இவருக்கு சர்க்கரை நோய் பிரச்சனை இருந்திருக்கிறது, ஒருமுறை காலில் இருந்த காயம் ஆறாமல் உடல்நிலை மோசமானதால் […]
உலக அழகி ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் நடிகை சினேகா உல்லல் தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளவர் நடிகை சினேகா உல்லல். இவர் பார்ப்பதற்கு அச்சு அசல் உலக அழகி ஐஸ்வர்யா ராய் போலவே தோன்றுவார். அவர் சில வருடங்கள் முன்பு இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். தற்போது அவர் நன்றாக குணமாகிவிட்டார். இந்நிலையில் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் இல்லை. ஆனால் மற்ற […]