Pichaikkaran2 [Image Source : Twitter/@vijayantony ]
‘பிச்சைக்காரன் -2’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இயக்கி தானே நடிகராகவும் நடித்துள்ள திரைப்படம் பிச்சைக்காரன்-2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த படத்தில் அவருடன் காவ்யா தாபர், ரித்திகா சிங், மன்சூர் அலி கான், ராதா ரவி, ஜான் விஜய், தேவ் கில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
படத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்னீக் பீக் ட்ரைலர் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனையடுத்து, இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தை வெளியிடுவதற்குத் தடை கோரி சென்னை உயர்நிதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதனால் படம் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது வழக்கு பிரச்சனைகள் அனைத்தும் முடிந்து இறுதியாக படம் வெளியாகும் தேதியை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, பிச்சைக்காரன் 2 திரைப்படம் வரும் மே மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்திற்கான டிரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…
லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…