பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை பராமரிப்பு பணிக்காக வரும் 15ம் தேதி முதல் 31 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு (ஆகஸ்ட் 14, 2025 வரை) பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட நாள்களில் யானை பாதை, படிப்பாதை உள்ளிட்டவற்றை பக்தர்கள் பயன்படுத்திகொள்ள கோயில் நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.
பக்தர்கள் மலைக்கோயிலை அடைய படிக்கட்டுகள், மின் இழுவை ரயில் (விஞ்ச்) அல்லது யானை பாதை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
மேலும், மொபைல் போன்கள் மலைக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படாததால், அவற்றை வைப்பதற்கு ரோப் கார் நிலையம், விஞ்ச் நிலையம் மற்றும் படிக்கட்டுகள் அருகே உள்ள வைப்பகங்களைப் பயன்படுத்தலாம். அதற்கு கட்டணம் ரூ.5 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை பழனி செல்ல திட்டமிடுவதற்கு முன், கூடுதல் தகவலுக்காக சமீபத்திய அறிவிப்புகளுக்கு பழனி முருகன் கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும் அல்லது கோயில் நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ளவும்.