pushpa 2 [file image]
புஷ்பா 2 : இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படங்களில் ‘புஷ்பா 2’. அல்லு அர்ஜுன் நடித்து வரும் இந்த படத்தினை இயக்குனர் சுகுமார் தான் இயக்கி வருகிறார். படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார். படம் இந்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சில காரணங்களால் அடுத்த ஆண்டுக்கு தள்ளி சென்றுள்ளது என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
முன்னதாக படத்தின் படபிடிப்பு தளத்தில் சுகுமாருக்கும் நடிகர் அல்லு அர்ஜூனுக்கும் இடையே சில வாக்கு வாதங்கள் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக கோபத்தில் இயக்குனர் சுகுமார் தன்னுடைய ஐபோனை உடைத்ததாகவும் தகவல்கள் வெளியானது.
அதனை தொடர்ந்து தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. படப்பிடிப்பிற்காக மிகவும் தொலைவில் இருந்து அல்லு அர்ஜுன் வருகை தந்தாராம். அப்போது,படத்தின் சீன் பேப்பர் காட்சி இந்த காட்சி தான் என்பது போல இயக்குனர் கொடுத்தாராம்.
அதனை பார்த்த அல்லு அர்ஜுன் அதில் சில மாற்று கருத்துக்களை கூறினாராம். இதனால், அல்லு அர்ஜுனுக்கும் இயக்குனர் சுகுமாருக்கும் இடையே சற்று வாக்கு வாதம் ஏற்பட்டதாம். இதனால் கடுப்பான அல்லு அர்ஜுன் வேகமாக படப்பிடிப்பு தளத்தை விட்டு நடிக்காமல் சென்று விட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. உண்மையில் இந்த தகவல் நடந்ததா அல்லது வெறும் வதந்தியா என்பது பற்றி கூடிய விரைவில் விளக்கம் கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…