rajini and brother [file image]
நடிகர் ரஜினிகாந்திற்கு மக்கள் அன்பாக கொடுத்த பட்டம் சூப்பர் ஸ்டார். அவருக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் வந்ததிலிருந்து இந்திய சினிமாவில் இருக்கும் பல பெரிய நடிகர்கள் கூட சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் என்று தான் அழைத்து வந்தனர். அந்த அளவிற்கு பல பெரிய ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இருப்பினும் சமீபகாலமாக இவர் தான் என மாறி மாறி தங்களுக்கு பிடித்த நடிகர்களை வைத்து ரசிகர்கள் சண்டைபோட்டு வருகிறார்கள். ஆனால், ரஜினி சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி எந்த பேச்சும் சரி தான் தான் பெரிய சூப்பர் ஸ்டார் என்பதை காமித்தது இல்லை. குறிப்பாக ஜெயிலர் படத்தின் வெளியீட்டு விழாவில் கூட சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சண்டை சமூக வலைத்தளங்களில் போய்கொண்டிருந்த நிலையில் சூசகமாக ரஜினி “சூப்பர் ஸ்டார் பட்டம் என்றாலே தொல்லை தான்” என தெரிவித்திருந்தார்.
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியதிலேயே தெரிந்தது ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் எல்லாம் முக்கியமில்லை என்று. இந்நிலையில், ரஜினியின் உடன் பிறந்த அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் சமீபத்திய பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் பட்டம் மக்கள் கொடுத்தது. அதை யார் வேணாலும் எடுத்துக்கட்டும். ரஜினி அதைப்பற்றி அக்கறை படமாட்டார் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” சூப்பர் ஸ்டார் பட்டம் என்பதை மக்கள் தான் அவருக்கு கொடுத்தது. அந்த பட்டத்தை மக்களே கொடுக்கவேண்டும். எனவே, அதை யார் வேணாலும் எடுத்துக்கட்டும். ரஜினியை மக்களுக்கு பிடித்த காரணத்தால் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து அவரை அப்படி வைத்திருக்கிறார்கள். எனவே, அதில் பெருசாக ஒண்ணுமில்லை.
ரஜினிக்கு அந்த பட்டம் ஒன்னும் தேவையில்லை. அந்த பட்டத்தை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும். ரஜினிக்கு அதில் எல்லாம் அக்கறை இல்லை. மக்கள் வைத்திருக்கிறார்கள் அப்படியே இருக்கட்டும் அப்படி தான் ரஜினி இருக்கிறார்” எனவும் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…