Categories: சினிமா

முதல் நாளில் ரூ.100 கோடி தட்டிய அனிமல்! ஷாருக்கானை மிஞ்சி ரன்பீர் கபூர் மிரட்டல் சாதனை.!

Published by
கெளதம்

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்திருக்கும் அனிமல் திரைப்படம் முதல் நாளில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

2018ஆம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் சந்தீப் ரெட்டி எழுத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் அனிமல் (ANIMAL). இந்த படத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா தவிர அனில் கபூர், பாபி தியோல் மற்றும் ட்ரிப்டி டிம்ரி ஆகியோரும் நடித்துள்ளனர்.

தமிழ், ஹிந்தி உட்பட 5 மொழிகளில் உருவான இந்தப்படம் நேற்று (டிசம்பர் 1ம் தேதி) உலக முழுவதும் வெளியானது.  படத்தில், ரன்பீர் சிங் கதாநாயகனாகவும், ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும், பாபி  தியோல் வில்லனாகவும், அனில் கபூர் கதாநாயகனின்  தந்தையாகவும் நடித்து உள்ளனர். படத்தின் கதைக்களம் என்பது தந்தை பாசம் கிடைக்காமல் ஏங்கித் தவிக்கும் மகனுக்கும். அவன் பாசம் வைக்கும் தந்தைக்கும் இடையிலான கதை தான்.

இப்படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் ரன்பீர் கபூரின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். அனிமல் திரைப்படம் வெளியான முதல் நாளின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பலரும் கண்டு மகிழ்ந்துள்ளனர்.

பாலிவுட் வரை வெடித்த ரோலக்ஸ் தாக்கம்! ‘அனிமல்’ படத்தில் அசத்தல் என்ட்ரி?

அனிமல் பாக்ஸ் ஆபிஸ்

இந்நிலையில், அட்வான்ஸ் புக்கிங் மூலம் ‘அனிமல்’ ரூ.61 கோடி வசூல் செய்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹிந்தியில் ரூ.50 கோடியும், தெலுங்கில் ரூ.10 கோடியும் வசூலித்துள்ளது. இப்படம் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் என உலக முழுவதும் மொத்தம் ரூ.116 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அன்னபூரணி முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? நயன்தாராவின் மவுசு குறையவே இல்லை!

Animal box office (Photo @letscinema)

ஷாருக்கான்-சல்மான் சாதனை முறியடித்த ரன்பீர்

அந்த வகையில், முதல் நாள் இந்திய வசூலில் ஷாருக்கானின் பதான், சன்னி தியோலின் கதர் 2 மற்றும் சல்மானின் ‘டைகர் 3’ ஆகியவற்றின் பாகிஸ் ஆபிஸ் சாதனைகளை ‘அனிமல்’ திரைப்படம் முறியடித்துள்ளது.

நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள்….நிறைவேறாமல் போன அந்த கனவு.!

அதன்படி, பதான் படம் முதல் நாளில் ரூ.57 கோடி வசூல் செய்துள்ளது. கதர் 2 வெளியான முதல் நாளில் 40.10 கோடியும், பைஜானின் டைகர் 3 முதல் நாளில் 44.50 கோடியும் வசூல் செய்தது. ஆனால், ‘அனிமல்’ திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.60 கோடிக்கும் மேல் வசூல் செய்து ரன்பீர் கேரியரில் முதல் நாளில் அதிக வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

Recent Posts

அமெரிக்காவின் டெக்சாஸை புரட்டிப்போட்ட வெள்ளம்.., 28 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி.!

டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…

53 minutes ago

கோவையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.!

கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.  இன்று (ஜூலை 7,…

1 hour ago

தமிழ்நாடு பிரீமியர் லீக்.., முதல்முறை கோப்பை வென்ற திருப்பூர் அணி.!

சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…

2 hours ago

“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…

3 hours ago

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. மகளிர் உரிமைத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பம்.!

சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…

3 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!

பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…

3 hours ago