anirudh [File Image]
இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். சொல்ல போனால், அனிருத்தை ட்ரெண்டிங் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.
‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், தற்போது பான் இந்திய படங்களின் அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் இசையமைத்து வருகிறார். கோலிவுட் முதல் பாலிவுட் வரை மெலடி, குத்து, செண்டிமெண்ட் என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.
அந்த வகையில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் படங்கள் என்றாலே அந்த படங்கள் அனைத்தும் சமீபகாலமாக வெற்றிபெற்று விடுகிறது. இவருடைய இசையில் கடைசியாக வெளியான ஷாருக்கான் நடித்த ஜவான் படம் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது.
இவருடைய இசையில் அடுத்ததாக லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படி, தனது கைவரிசையில், தென்னிந்திய சினிமாவின் பல திரைப்படங்களில் கமிட்டாகி உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’ மற்றும் ‘தலைவர் 171’, உலகநாயகனின் ‘இந்தியன்2’ திரைப்படம். அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’, ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ ஆகிய பிரம்மாண்ட படங்களில் அதிகாரப்பூர்வமாக இசையமைத்து வருகிறார்.
இணையத்தில் கசிந்த தகவல்
இதை தவிர, சிவகார்த்திகேயனை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் திரைப்படம், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படம். ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பரிவ் இயக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் அவரே நடித்தும் இசையமைக்கவும் உள்ளார்.
கவினின் 4வது படத்திற்கும், விஜய் தேவரகொண்டா நடிக்கும் 12வது படம், திரிவிக்ரம் மற்றும் அட்லீ கூட்டணியில் அல்லுஅர்ஜுன் நடிக்கும் புதிய படத்திற்கும் அதர்வா மற்றும் குஷி கபூர் நடிக்கவிருக்கும் படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…