பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்றைய தினம் வெளியான சம்யுக்தா தனது குடும்பத்துடன் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து தற்போது 56 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஒவ்வொரு வாரமும் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் .அந்த வகையில் டாப்பிள் கார்டு மூலம் நாமினேஷனில் சிக்கிய சம்யுக்தா எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்றைய தினம் வெளியேறினார் .
அதன் பின் அவர் கூறியதாவது ,இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவேன் என்று தான் எதிர்ப்பார்க்கவில்லை என்றும்,அது தனக்கு கஷ்டமாக தான் இருப்பதாகவும்,ஆனால் அதே நேரத்தில் தனது மகனை காண போகிறோம் என்ற மகிழ்ச்சி உள்ளதாகவும் கூறினார் .மேலும் இங்கிருந்து நிறைய அனுபவங்களையும் , நண்பர்களையும் கொண்டு செல்வதாகவும் கமலிடம் கூறினார்.
இந்நிலையில் 8 வாரங்களுக்கு பிறகு வீட்டிற்கு வந்த சம்யுக்தாவை அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்று கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர் .பின் தனது மகனை கட்டி அணைத்து அன்பை பகிர்ந்து கொண்டுள்ளார் . பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் சம்யுக்தா தனது குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…