Sathish [File Image]
காமெடி நடிகர் சதிஷ் நடிப்பில் வெளியான ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. த்ரில்லர் கதை அம்சத்தை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தினை செல்வின் ராஜ் சேவியர் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் சதிஷுடன் ஆனந்தராஜ், எல்லி அவ்ரம், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி இன்னும் பல திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. 3-வாரங்களை கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் படம் ஓடி வருகிறது.
தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமா?
இந்த நிலையில், மக்கள் அனைவர்க்கும் நடிகர் சதிஷ் நன்றியை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கான்ஜுரிங் கண்ணப்பன் படம் வெற்றிகரமாக மூன்றாவது நாள் அடி எடுத்து வைத்துள்ளது. இந்த திரைப்படம் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு பிடித்த படமாக இருக்கிறது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் எல்லா திரையரங்குகளிலும் பார்த்தேன் படத்தை குடும்பமாக பார்த்தார்கள்.
ரொம்ப நாள் கழித்து ஒரு குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் ரசிக்கும் படமாக இந்த படம் அமைந்தது எனக்கு மன நிறைவாக உள்ளது. இன்னும் படம் திரையரங்குகளில் ஓடி கொண்டு இருக்கிறது. படம் பார்க்காதவர்கள் படத்தை குடும்பத்தோடு பாருங்கள். மக்கள் கொடுக்கும் ஆதரவுக்கு நன்றி” எனவும் நடிகர் சதிஷ் தெரிவித்துள்ளார். மேலும் கான்ஜுரிங் கண்ணப்பன் இதுவரை உலகம் முழுவதும் 8 கோடி வரை வசூல் செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…