ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் நகர் பகுதிகளில் 3,768 முகாம்கள், ஊரக பகுதிகளில் 6,232 முகாம்கள் நடத்தப்படுகிறது

MK Stalin

சென்னை : ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு தொடங்க உள்ளது. இந்த திட்டத்தை வரும் 15ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஜூலை 15 முதல் நவம்பர் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10,000 முகாம்கள் நடத்தப்படும், இதில் நகரப் பகுதிகளில் 3,768 முகாம்களும், கிராமப் பகுதிகளில் 6,232 முகாம்களும் அமைக்கப்படும். இவற்றில் 13-14 அரசுத் துறைகள் மூலம் 43-46 வகையான சேவைகள் வழங்கப்படும்.

அரசு துறைகளின் சேவைகளை மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள பெண்கள் இம்முகாம்கள் மூலம் விண்ணப்பிக்கலாம், மேலும் விண்ணப்பங்கள் 45 நாட்களுக்குள் பரிசீலிக்கப்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை சிதம்பரத்தில் ஜூலை 15ம் தேதி தொடங்கி வைப்பார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்