சென்னை : தமிழகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07, 2025) தொடங்குகிறது. இந்தப் பணியின் கீழ், சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்கள் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கப்படும். இந்தப் பணி மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறும். இத்திட்டத்தின் முதல் முகாம் ஜூலை 15, 2025 அன்று கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்படும். […]
சென்னை : ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு தொடங்க உள்ளது. இந்த திட்டத்தை வரும் 15ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஜூலை 15 முதல் நவம்பர் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10,000 முகாம்கள் நடத்தப்படும், இதில் நகரப் பகுதிகளில் 3,768 முகாம்களும், […]