டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி, அங்கு அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் குவாட் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்பட உலகத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். அதிபர் ஜோ பைடன் தலைமையில் […]
அமெரிக்கா : வட-மத்திய அமெரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்ட நிலையில், குறைந்தது 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அயோவாவில் ஒருவரும், தெற்கு டகோட்டாவில் ஒருவரும் இறந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும், இவர்களுடைய உடல்களை மீட்க முடியவில்லை என மீட்பு துறையினர் தகவலை தெரிவித்துள்ளனர். கிழக்கு நெப்ராஸ்கா மற்றும் தெற்கு டகோட்டாவிலிருந்து அயோவா மற்றும் மினசோட்டா வரையிலான பகுதியில், கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக […]
Economic Sanctions: ஈரான் மீது அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் பொருளாதார தடை விதிப்பதாக அறிவிப்பு. கடந்த சில நாட்களாக இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் நிலவு வருகிறது. இம்மாதம் தொடக்கத்தில் சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த ஈரானுக்கு கோபத்தை உண்டாக்கியது. இந்த தாக்குதலில் ஈரானின் புரட்சிப்படை தளபதி உட்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் ஆத்திரமடைந்த ஈரான் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கை […]
Isreal : இஸ்ரேல் ராணுவத்திற்கு அமெரிக்கா ஆயுதங்களை அனுப்பி உதவி செய்துள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஹாமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு தற்போது வரையில் இஸ்ரேல் ராணுவம், ஹாமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரின் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை காசா நகரில் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் அதில் பெரும்பாலும் காஸாவில் வசிக்கும் பொதுமக்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. போரை நிறுத்த சொல்லி பல்வேறு நாடுகள் […]
Jagadeep Dhankhar : இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிற்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை – துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை காவலில் உள்ளார். மாநில முதல்வர் கைது பற்றி அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் கேள்விகளை எழுப்பியிருந்தது. அதுபற்றி கருத்துக்கள் கூறியிருந்தது. மேலும், இதில் இந்திய பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் […]
Russia : ரஷ்யாவில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து இம்மாத தொடக்கத்தில் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவின் வெளியே கிரோகஸ் நகரில் நேற்று பிரபல இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் சுமார் 5000 பேர் கலந்து கொண்டனர். அப்போது சில மர்ம நபர்கள் உள்ளே புகுந்து வெடிகுண்டு வீசியும் துப்பாக்கியால் சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 150 பேர் கடயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு […]
CAA : நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2019 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படுவதாக மார்ச் 11ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 2014, டிசம்பர் 31க்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்தர்கள், சமணர்கள் உட்பட 6 சமூகத்தினருக்கு (இஸ்லாமியர்கள் தவிர) குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது. Read More – குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யும் அதிகாரம் எந்த மாநில அரசுக்கும் இல்லை.. […]
கலிபோர்னியாவில் உள்ள சாண்டா கிளாரா நகரத்தில் கூகுள் மென்பொருள் பொறியாளர் ( Software Engineer ) ஒருவர் தனது மனைவியை கொடூரமாக கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். லீரேன் சென் (27 வயது) அவரது மனைவி சுவானி யு-வின் உடலுக்கு அருகில் ரத்த கரையுடன் இருந்தநிலையில் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் கூகுள் பொறியாளர்கள் ஆவார்கள். இது குறித்து சாண்டா கிளாரா நகர போலீசார் கூறுகையில் “கடந்த ஜனவரி 16 ஆம் தேதி காலை 11 மணியளவில் […]
இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த மேலும் ஒரு கப்பல் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த எம்.வி கெம் புளூட்டோ கப்பல் மீது நேற்று அரபிக்கடலில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த டிரோன் தாக்குதல் பரபரப்பு அடங்குவதற்குள் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த மற்றொரு கப்பல் மீது செங்கடலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செங்கடல் வழியாக வந்த காபான் நாட்டைச் சேர்ந்த சாய்பாபா என்ற கப்பல் இந்திய தேசிய கொடியுடன் […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் ஹண்டர் பைடன் மீது கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஹண்டர் பிடன், கடந்த 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையில் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என டேவிட் வெயிஸ் என்பவர் அமெரிக்கா, கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் 56 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். ஹண்டர் பைடன் மீது தவறான வருமானவரி கணக்குகள், வரி ஏய்ப்பு, […]
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது அவ்வப்போது அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் குறிப்பாக கல்வி நிலையங்களில் இந்த துப்பாக்கி சூடு என்பது சமீப காலமாகவே பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்தும் இந்த சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் (UNLV) உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் நேற்று ( புதன்கிழமை) ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் 3 பேர் […]
இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் அமெரிக்காவின் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று மேற்கு ஆசியாவில் நுழைந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. அதன்படி, யுஎஸ் சென்ட்ரல் கமாண்ட் ஆனது எக்ஸ் பக்கத்தில், “நவம்பர் 5ம் தேதி ஒரு ஓஹியோ-வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்க மத்திய கட்டளைப் பகுதிக்கு வந்தது.” என்று தெரிவித்துள்ளது. அந்த பதிவில் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது. அதில் கெய்ரோவின் வடகிழக்கு அல் சலாம் பாலத்தின் கீழ், சூயஸ் கால்வாயில் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் செல்வது தெரிகிறது. அமெரிக்க […]
அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் உள்ள ஜிம் ஒன்றில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) அன்று 24 வயதான இந்திய பட்டதாரி மாணவர் வருண் ராஜ் புச்சாவை ஜோர்டான் ஆண்ட்ரேட் (24) என்பவர் கத்தியால் தாக்கியுள்ளார். தெலுங்கானாவைச் சேர்ந்த இந்திய பட்டதாரி மாணவர் வருண் ராஜ் புச்சா, அமெரிக்காவில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் தலையில் பல முறை கத்தி குத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. பலத்த காயமடைந்த வருண் ராஜ், தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை […]
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு வன்முறை கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. ஹாலோவீன் வார இறுதியில், அந்த நாட்டின் பல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதாகவும், 50க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். அமெரிக்காவின் முக்கிய பகுதிகளான டெக்சாஸ், இண்டியானா, புளோரிடா, இல்லினாய்ஸ் மற்றும் ஜார்ஜியா, கன்சாஸ், மேரிலாந்து, நியூ மெக்சிகோ, லூசியானா மற்றும் ஓஹியோ ஆகிய இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, டெக்சாஸின் டெக்சர்கானாவில், […]
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹமாஸ் அமைப்பு , இஸ்ரேல் மீது போர் தொடுத்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து 20 நாட்களாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அதே போல, ஹமாஸ் அமைப்புக்கு மறைமுக ஆதரவை ஈரான் அளித்து வருகிறது. இதனால், ஈரான் – அமெரிக்கா இடையேயும் தொடர் பனிப்போர் நிலவி வருகிறது. காசாவில் நுழைந்து […]
அக்டோபர் 6, இந்த தேதி இஸ்ரேல் மக்களால் மறக்க முடியாத நாளாக மீண்டும் ஒரு முறை மாறி உள்ளது. 1973ஆம் ஆண்டு இதே அக்டோபர் 6ஆம் தேதி, யூதர்களின் புனித நாளான அன்று இஸ்ரேல் அமைதியாக தங்கள் உண்ணா நோன்பை கடைபிடித்து வந்தனர். அன்றைய தினம் அமைதியாக இருக்கும் வேளையில் தான் சிரியா , எகிப்து உள்ளிட்ட அரபு நாடுகள் குண்டுமழை பொழிந்தன. அரபு நாடுகளின் தாக்குதல்களை சற்றும் எதிர்பார்க்காத இஸ்ரேல், அதனை உணர்ந்து, பின்வாங்காமல் பதில் […]
சுந்தர் பிச்சைக்கு உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதை வழங்கினார் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர். தமிழ் நாட்டை சேர்ந்த ஆல்பாஃபெட் (கூகுள்) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சைக்கு, வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவில் இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இன்று உலகே இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த சுந்தர் பிச்சையிடம் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் பத்ம பூஷன் விருதை […]
அமெரிக்காவில் உள்ள பேட்டரிகளுக்கு மக்கும் எலக்ட்ரோலைட்டை உருவாக்க நண்டு ஓடுகள் பயன்படுத்தப்படுகிறது. நண்டு ஓடுகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட எலக்ட்ரோலைட்டுடன் கூடிய புதிய ஜிங்க் பேட்டரியை மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் மெட்டீரியல் கண்டுபிடிப்பு மைய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நண்டு ஓடுகளில் காணப்படும் சிட்டோசனில் இருந்து எலக்ட்ரோலைட் தயாரிக்கப்படுகிறது. சிட்டோசன் மக்கும் தன்மையுடையது என்பதால், பேட்டரியில் மூன்றில் இரண்டு பங்கு எந்த ஒரு தீங்கு விளைவிக்கும் பொருட்களையும் விட்டு வைக்காமல் இயற்கையாகவே சிதைந்துவிடும். ஆய்வின்படி, 1000 பேட்டரி சுழற்சிகளுக்குப் பிறகு பேட்டரி […]
சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த 17 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள எல்லை பகுதியில் வேலி மீது ஏறி சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்காவைச் சேர்ந்த குடிமக்கள் மொத்தம் 100 பேர் அடங்கிய புலம்பெயர்ந்தோர் குழு ஒன்றை செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் சான் டியாகோ செக்டார் பார்டர் ரோந்து அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் 100 பேர் கொண்ட இந்த புலம்பெயர்ந்தோர் குழுவில் 17 பேர் இந்திய குடிமக்கள் […]
அவசரமாக விமானம் தரையிறங்குவதற்கு முன் பாராசூட் இல்லாமல் விமானத்திலிருந்து விழுந்த விமானி மரணம். அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கு முன்பு சிறிய சரக்கு விமானத்தின் துணை விமானி கீழே விழுந்து உயிரிழந்தார். ராலே-டர்ஹாம் சர்வதேச விமான நிலையத்திற்கு தெற்கே சுமார் 30 மைல் தொலைவில் ஃபுகுவே-வரினா நகரில் 23 வயதான சார்லஸ் ஹெவ் க்ரூக்ஸின் துணை விமானியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை பிற்பகல் விமான நிலையத்தில் சக்கரங்களில் ஒன்று தரையிறங்கும் கியரில் இருந்து விலகியதைத் […]