மாநாடு பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வின் போது, மேடையில் பேசிய சிம்பு கடைசியில் கண்ணீர் சிந்தி அழுதுவிட்டார்.
சிலம்பரசன் நடிப்பில் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.
மேலும், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம் ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் படக்குழுவினர் பேசினர். அப்போது பேசிய படத்தின் ஹீரோ சிலம்பரசன். ,’ இந்த படத்தில் ரெம்ப கஷ்டப்பட்டு நடித்துள்ளேன். அனைவரும் இந்த படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு வேலைசெய்துள்ளனர்.
யுவனின் ராசி நட்சத்திரம் கேட்டு அதே ராசி நட்சித்திரம் உள்ள பெண்ணை பார்த்து திருமணம் செய்ய வேண்டும். ஏனென்றால் நான் என்ன செய்தாலும் யுவன் தாங்கிக்கொள்வார். என்னை முழுதாக புரிந்துகொள்வார். என படக்குழுவினர் அனைவரையும் சிரித்தபடி பாராட்டினார்.
இறுதியில், எனக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் நீங்கதான் பாத்துக்கணும் என கூறி மேடையில் கண்ணீர் சிந்தி அழுதுவிட்டார். இதனை அடுத்து, படக்குழுவினர் அவரை தேற்றினார். ரசிகர்கள் தங்கள் கரகோஷம் மூலம் ஆறுதல் சொல்ல முற்பட்டனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…