சிவகார்த்திகேயனின் தெலுங்கு படத்திற்காக வெளிநாட்டில் இருந்து கதாநாயகியை அறிமுகமாக்க படக்குழு புதிய வெளிநாட்டு ஹீரோயினை தேடி வருகிறதாம்.
தற்போதைய தென்னிந்திய சினி வட்டாரத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்கள் தமிழ் இயக்குநர்களுடனும், தெலுங்கு இயக்குனர்கள் தமிழ் நடிகர்களுடன் கூட்டணி வைத்து இரண்டு மொழிகளிலும் தடம் பாதிக்க நடிகர்கள் முயன்று வருகின்றனர்.
அந்த வகையில், சிவகார்த்திகேயனும் தெலுங்கு இயக்குனர் உடன் கூட்டணி வைத்துள்ளார். ஜாதி ரத்னலு எனும் சூப்பர் ஹிட் காமெடி படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனர் அனுதீப் உடன் அடுத்த படத்திற்கு இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன்.
இந்த படத்தின் கதைக்களமானது, வெளிநாட்டில் இருந்து வரும் வெளிநாட்டு பெண்ணை, இங்குள்ள பையன் எப்படி காதலித்து கரம் பிடிக்கிறான் என்பது போல காமெடி கமர்சியல் கலந்து அமைக்கப்பட்டுள்ளதாம்.
இதற்காக மதராசபட்டினம் படத்திற்காக எமி ஜாக்சன் இறக்குமதி ஆனது போல வெளிநாட்டில் இருந்து நாயகியை இறக்குமதி செய்ய படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறதாம். இந்த படத்திற்கான ஷூட்டிங் பொங்கல் முடிந்து தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…