முக்கியச் செய்திகள்

Chokka Thangam : எமோஷனலில் உருக வைத்த ‘சொக்க தங்கம்’! செட்டிமெண்ட்டை கையில் எடுத்து மொக்க வாங்கிய பாக்கியராஜ்!

Published by
பால முருகன்

இயக்குனர் பாக்யராஜ் இயக்கம் படங்களும் நடிக்கும் படங்களும் ஜாலியாக இருக்கும். குறிப்பாக சுவரில்லாத சித்திரங்கள், குமரி பெண்ணின் உள்ளத்திலே, இன்று பொய் நாளை வா, முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள் உள்ளிட்ட படங்கள் எல்லாம் மக்களை சிரிக்க வைத்து இருந்தது. தொடர்ச்சியாக இப்படி காமெடி கலந்த கதையம்சம் கொண்ட திரைப்படத்தை இயக்கி வந்த பாரதி ராஜா திடீரென தங்கை செண்டிமெண்ட் கதையில் குதித்தார்.

அதாவது, விஜயகாந்தை வைத்து பாக்யராஜ்  இயக்கிய சொக்க தங்கம் படம் முழுக்க முழுக்க அண்ணன் தங்கச்சி செண்டிமெண்ட் வைத்து எடுத்திருப்பார். படத்தில் சௌந்தர்யா, மரகதமாக உமா, கவுண்டமணி, செந்தில், பிரகாஷ் ராஜ், சுவாதி, சி.ஆர்.சரஸ்வதி, சிந்து, பொன்னம்பலம் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் தங்களுடைய சூப்பரான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். படமும் ஒரு நல்ல பீல் குட் திரைப்படமாக தான் இருந்தது. குறிப்பாக அண்ணன் -தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் நம்மளை உருக வைத்து இருக்கும். அதைப்போலவே எமோஷனலான காதல் காட்சிகளும் நம்மளை கண்கலங்க வைத்திருக்கும்.

வழக்கமான பாக்யராஜ்  படங்களின் காமெடி காட்சிகள் இந்த படத்தில் இடம்பெறவில்லை என்றாலும் கூட சிரிக்க வைக்கும் வகையில் காமெடி காட்சிகள் இருக்கும். இந்த படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை இருப்பினும் வசூல் ரீதியாக ஒரு சுமாரான வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது. படம் வெற்றிபெற்றாலும் கூட செட்டிமெண்ட்டை கையில் எடுத்த பாக்யராஜிற்கு இந்த படத்தினால் பாராட்டுக்கள் வரவில்லை.

அந்த சமயமே படம் பார்த்த பலரும் இதற்கு முன்பு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான படங்களின் காமெடியை போல இந்த சொக்க தங்கம் படத்தின் நகைச்சுவையான திரைக்கதை இல்லை அவருடைய காமெடி காட்சிகளை எதிர்பார்த்து தாங்கள் படத்திற்கு வந்தோம் எனவும் கூறினார்கள். படம் செண்டிமெண்டாக இருந்தாலும் கூட வழக்கமான பாக்யராஜ் படமாக இல்லை எனவே வெளிப்படையாக கூறினார்கள்.

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, வேட்டிய மடிச்சு கட்டு, என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த பாக்யராஜ் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புகள் அனைத்திற்கும் சேர்த்து  சொக்க தங்கம் படத்தின் மூலம் நம்மளை சிரிக்க வைத்து எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார் என எதிர்பார்த்தனர். ஆனால், அந்த எதிர்பார்ப்பை சொக்க தங்கம் படம் பூர்த்தி செய்யவில்லை.

படம் எமோஷனலாக இருந்தும் கூட படம் சரியான வரவேற்பை பெறவில்லை இதனால் முதன் முறையாக செட்டிமெண்ட்டை கையில் எடுத்து பாக்கியராஜ் மொக்கையும் வாங்கினார். பிறகு பாரிஜாதம் எனும் திரைப்படத்தை எடுத்து அந்த படத்தின் மூலம் மீண்டும் காமெடி பார்முலாவுக்கு திரும்பி காம்பேக் கொடுத்தார்.

Published by
பால முருகன்

Recent Posts

திமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும் -ராஜேந்திர பாலாஜி பேச்சு!

சேலம் : மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டியில் ஜூலை 25, 2025 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும்,…

34 minutes ago

இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும்,…

1 hour ago

தமிழகத்தில் பிரதமர் மோடி துவக்கி வைக்கவிருக்கும் திட்டங்கள் என்னென்ன?

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, இன்று, நாளை (26,27) ஆகிய இரு நாட்கள் தமிழகத்திற்கு வருகை தருகிறார். இந்தப்…

1 hour ago

மதுரையில் நடக்கும் தவெக-ன் 2து மாநாடு நடக்கும் இடத்தில் மணல் புயல்.!

மதுரை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 25ம் தேதி அன்று நடைபெற…

2 hours ago

ராகுல் காந்திபோல தவறை ஸ்டாலின் உணர்வாரா? – அன்புமணி கேள்வி.!

சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது விமர்சனம்…

3 hours ago

தமிழகம் வரும் பிரதமர் மோடி.., முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை மனு.!

சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தினார். முதல்வர் ஸ்டாலின்…

3 hours ago