soori [file image]
மிக்ஜாம்புயல் சென்னையைத் தாக்கி ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது, நகரம் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் சமூக நிதியுதவி அளித்து வருகின்றனர்.
முன்னதாக நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த லிஸ்டில் சமீபத்திய நடிகர் சூரி இணைந்துள்ளார். தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு (சிஎம்பிஆர்எஃப்) ரூ.10 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.
இது தொடர்பாக, உதியநிதி தனது X தள பக்கத்தில், திரைப்பட நடிகர் அண்ணன் சூரி அவர்கள் மதுரை அம்மன் உணவகம் சார்பில், வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ‘தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதி’க்கு ரூ.10 லட்சம் காசோலையை வழங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நடிகராக இல்லாமல், தொழிலதிபராக முன் வந்து நிதியுதவி செய்தது அனைவரையும் ஈர்த்துள்ளது. இந்த நிதி அளிக்கும் திரையுலக பிரபலங்களின் லிஸ்டில் முதல் ஆளாக, நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் மிக்ஜாம் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கினர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…