Suriya - Kanguva [File Image]
சென்னை பூந்தமல்லி அருகே கங்குவா படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதில் நடிகர் சூர்யா காயமடைந்துள்ளார்.
நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோருக்கு இடையேயான முதல் கூட்டணியைக் குறிக்கும் “கங்குவா” திரைப்படம் ஒரு பீரியட்-ஆக்சன் படமாக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை திஷா பதானி நடிக்கிறார்.
படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிகிறது படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், இந்த திரைப்படம் நடிகர் சூர்யாவின் கேரியரில் மிகப்பெரிய ரிலீஸாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவில் கூட அந்த அளவுக்கு பிரமாண்டமாக காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதுபோல், இந்த படத்தில் வானம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகியவற்றை ஐம்பூதங்கள் அல்லது பஞ்சபூதங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஐம்பூதங்களிலும் இப்படத்தில் சண்டை காட்சிங்கள் எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சபூதங்களில் சண்டை காட்சி…மிரட்ட காத்திருக்கும் கங்குவா திரைப்படம்!
தற்போது, பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் சண்டை காட்சி தொடர்பான படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளது. சண்டை காட்சியின்போது கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் விழுந்துள்ளது. இதில், நடிகர் சூர்யா காயமடைந்ததால் உடனடியாக சிகிச்சையளிக்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
உலகம் முழுவதும் 38 மொழிகளில்…தமிழ் சினிமாவை மாற்ற போகும்’கங்குவா’ திரைப்படம்!
அவரது உடல்நிலை குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும், விபத்து காரணமாக இன்று படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்து தொடர்பாக, நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…