cool suresh [File Image]
நடிகர் மன்சூர் அலிகான் நடித்துள்ள சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு பாக்கியராஜ், கூல் சுரேஷ், பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்துகொண்டார்கள். வழக்கம் போல எல்லா ப்ரோமோஷனிகளிலும் ஏதேனும் வித்தியாசமாக செய்யும் கூல் சுரேஷ் இந்த ப்ரோமோஷனிலும் ஒரு வேலை செய்து சர்ச்சையில் மாட்டிக்கொண்டார்.
படத்தின் இசை வெளியீட்டு விழாவின் மேடையில் பேசிக்கொண்டிருந்த கூல் சுரேஷ் “எனக்கெல்லாம் மாலை போட்டீர்கள் ஆனால் இதுவரை பலரை வரவேற்று நிகழ்ச்சியை கலகலப்பாக மாற்றிய இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளருக்கு நீங்கள் மாலை போடவில்லையே என தனது கையில் இருந்த பெரிய மாலையை சட்டென்று தொகுப்பாளினிக்கு போட்டுவிட்டார்.
இதனை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்த அந்த தொகுப்பாளினி வேகமாக மாலை கழட்டி கீழே தள்ளிவிட்டு சற்று கோபப்பட்டார். பிறகு மன்சூர் அலிகான் பேசும்போது கூல் சுரேஷ் செய்தது தவறு அவரை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள் என கீழே இருந்த பத்திரிகையாளர் ஒருவர் கூறினார். பிறகு மன்சூர் அலிகான் கூல் சுரேஷ் அப்படி செய்திருக்க கூடாது. இந்த தப்புக்கு நானும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என மன்னிப்பு கேட்டார்.
பிறகு, கூல்சுரேஷிடமும் நீ பகிரங்கமாக மன்னிப்பு கேள் இதற்கு நீ தான் பதில் சொல்ல வேண்டும் என மன்சூர் அலிகான் கேட்டுக்கொண்டார். அதன்பின் கூல் சுரேஷ் மீண்டும் மேடைக்கு வந்து “நான் வேண்டுமென்று செய்யவில்லை. வந்ததில் இருந்து நாங்கள் இருவரும் நகைச்சுவையாக தான் பேசிக்கொண்டு இருந்தோம். எனவே, நான் நகைச்சுவையாக தான் செய்தேன். நான் இப்படி செய்தது மிகவும் தவறு இப்பொது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
என மன்னிப்பு கேட்டார். இதனை பார்த்த அந்த தொகுப்பாளினி மிகவும் ஆத்திரத்துடன் இருந்தார். பொது இடம் என்பதால் அவர் எதுவும் சொல்லாமல் கோபத்தை தனக்குள் வைத்துக்கொண்டு அப்படியே நின்று கொண்டு இருந்தார். இருப்பினும் திடீரென பொது மேடையில் ஒரு பெண்ணின் கழுத்தில் மாலை போட்டது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் பலரும் கூல் சுரேஷ் செய்தது தவறு என கூறி வருகிறார்கள்.
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…