simran sad [File Image]
Simran : படப்பிடிப்பு தளத்தில் நடிகை சிம்ரன் பயங்கரமாக இயக்குனரிடம் திட்டு வாங்கிய சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
சினிமா துறையில் இருக்கும் எல்லா நடிகைகளும் இயக்குனரிடம் திட்டுவாங்காமல் பெரிய நடிகையாக வளர்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம். அப்படி தான் நடிகை சிம்ரனும் ஆரம்ப காலத்தில் இயக்குனர் எஸ்ஏசந்திரசேகரிடம் திட்டு வாங்கினாராம். எஸ்ஏசந்திரசேகர் இயக்கத்தில் சிம்ரன் விஜய்க்கு ஜோடியாக ஒன்ஸ் மோர் என்ற படத்தில் நடித்து இருந்தார்.
இந்த திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசனும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்து கொண்டிருந்த சமயத்தில் எல்லாம் சிம்ரன் அவ்வளவு பெரிய நடிகை எல்லாம் இல்லை. எனவே, சிவாஜி கணேசன் பற்றி அந்த அளவிற்கு சிம்ரனுக்கு தெரியாது. இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு எல்லாருமே காலையில் விரைவாக வந்துவிடுவார்கள்.
ஏனென்றால், படத்தில் சிவாஜி கணேசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தது தான். அவர் படப்பிடிப்பு தளத்திற்கு அனைவர்க்கும் முன்பே வந்துவிடுவார். எனவே, அவ்வளவு பெரிய ஜாம்பவான் அவரே சீக்கிரமாக வந்துவிடுகிறார் என எல்லாம் பிரபலங்களும் அவருக்கும் முன்னதாக வந்து விடுவார்களாம்.
ஆனால், சிம்ரன் மட்டும் நேரம் தாமதமாக படப்பிடிப்புக்கு ஒரு முறை வந்துவிட்டாராம். அவருக்கு முன்பு எல்லாரும் வந்து சிவாஜியுடன் நின்று கொண்டு இருந்தார்களாம். சிம்ரன் தாமதமாக வந்த காரணத்தால் எஸ்ஏசந்திரசேகர் கடுமையாக கோபம் வந்து திட்டமினாராம். உனக்கு அறிவு இல்லையா இப்போது வருகிறாய் என்ன நீ உன்னுடைய இஷ்டத்திற்கு பண்ணிகொண்டு இருக்கிறாய் என திட்டினாராம்.
உடனே சிம்ரன் சற்று கண்கலங்கிவிட்டாராம். பிறகு சிவாஜி சிம்ரனை அழைத்து என்ன வெளியூரா என்று கேட்டாராம். அதற்கு சிம்ரன் சோகத்துடன் ஆமாம் என்று கூற சரி விடு இனிமேல் சரியாக படப்பிடிப்பில் கலந்துகொள் சரியான நேரத்திற்கு வா என்றுகூறினாராம் . அதில் இருந்து சிம்ரன் சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்தாராம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…