The Kerala Story [Image source : bookmyshow]
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் இன்று வெளியாகியுள்ளது.
தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படத்தில் கேரள பெண்கள் ISIS தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை கோரியது. படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் நேற்று மறுத்ததை அடுத்து இன்று படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், கலவரம் ஏதும் நடக்காமல் இருக்க கேரளா மற்றும் தமிழக திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
டிஜிபி அதிரடி உத்தரவு:
இந்த நிலையில், தமிழ்நாட்டில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளியாக உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும், உரிய பாதுகாப்பு அளிக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் சட்ட ஒழுங்கை பாதிக்கும் கருத்துக்கள் வெளியிட்டால், அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறித்தியுள்ளார்.
சென்னையில் பலத்த பாதுகாப்பு:
அதன்படி, சென்னையில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் திரையிடப்படும் 15 திரையரங்குகளில் பாதுகாப்பு பணியில் தலா 30 பேலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்திரைப்படத்திற்கு எதிராக 6 இடங்களில் போராட்டம் நடத்தப்படவுள்ள நிலையில், அங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலீசார் குவிப்பு:
மேலும், கோவையில் இன்று ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகும் நிலையில், படம் வெளியாகும் மால்களில், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தி கேரளா ஸ்டோரி:
லதா சீனிவாசன் எழுதிய, இயக்குனர் சுதிப்தோ சென்னின் இயக்கிய இந்தி திரைப்படமான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு தணிக்கை குழு 10 காட்சிகளை நீக்கி மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…