Rebel Official Teaser [File Image]
இசையமைப்பாளராக ஒரு பாக்கம் கலக்கி வரும் ஜிவி பிரகாஷ் நடிகராகவும் ஒரு பக்கம் கலக்கி வருகிறார். அந்த வகையில், இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான அடியே திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ‘ரெபெல்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தினை நிகேஷ்.ஆர்.எஸ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் மமிதா பைஜு, வெங்கடேஷ்.வி.பி, ஷாலு ரஹீம், கருணாஸ், ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், சுப்ரமணிய சிவா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கான டீசர் இன்று வெளியாகும் எனவும், அதனை சூர்யாவே வெளியிடுவார் எனவும் முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து, தற்போது படத்திற்கான டீசர் வெளியாகியுள்ளது.
டீசரில் தமிழுக்காக போராடி இறந்தவர் ஒருவர் இருக்கிறார் என்ற வசனம் வந்தவுடன் ஜிவி பிரகாஷ் வருகிறார். எனவே, டீசரை வைத்து பார்க்கையில் அவர் படத்தில் தமிழுக்காக போராடுபவராக நடித்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த திரைப்படமும், ஜிவி பிரகாஷிற்கு வெற்றி படமாக இருக்கும் என தெரிகிறது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…