சத்தியமா சொல்றேன்…சினிமாவை விட்டு விலக முடிவெடுத்தேன்…பார்த்திபன் எமோஷனல்!!

Published by
பால முருகன்

பார்த்திபன் : நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ஒத்த செருப்பு படத்தினை தொடர்ந்து ‘TEENZ’ (டீன்ஸ்) என்கிற படத்தினை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் கடந்த ஜூலை 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல இருந்த காரணத்தால் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

வழக்கமாகவே பார்த்திபன் இயக்கும் படங்கள் வித்தியாசமான கதை களத்தை கொண்ட படமாக இருக்கும். அதைப்போலவே, இந்த டீன்ஸ் படமும் இருப்பதால் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, படத்திற்கு வரும் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக எமோஷனலாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Friends சத்தியமா சொல்றேன் TEENZ -க்கு உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடம் இருந்து கிடைக்கலைன்னா நான் மிகவும் நேசித்த உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகி கண்காணா இடத்துக்கு மறைஞ்சே போயிட முடிவெடுத்தேன். இப்ப நீங்க எல்லாரும் ஒரு முகமா குடுக்குற பாராட்டுல நான் ‘ஓ’ன்னு சந்தோஷத்தில அழுவுறது உங்களுக்கு கேக்க வாய்ப்பே இல்லே.
இது போதாது இன்னும் ஆதரவு தந்து பலரும் பாக்க உதவி செஞ்சி என்னை சந்தோஷத்தில சாகடிங்க. அடுத்த தலைமுறை ரசிக்கும் படியும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக ஒரு science fiction & fantasy thought ல் எடுக்கப் பட்ட இப்படம் பள்ளிகளும் கல்லூரிகளும் இல்லங்களும் கொண்டாட வேண்டும். நன்றி பார்வையிட்டவர்களின் பாதங்களுக்கு வரம் : வரவிருக்கும் தூய்மையான வெற்றி” என்று கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

“இது ஒன்றும் போட்டியல்ல.., இந்த ஒப்பீடு தேவையற்றது” – மனம் திறந்த பாடகி சின்மயி.!

சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…

33 minutes ago

பஞ்சாப் vs மும்பை: பைனலுக்கு போக போவது யார்? டாஸ், பிளேயிங் லெவன் இதோ.!

அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

55 minutes ago

“மக்கள் ஆதரவுடன் திமுக கூட்டணி வெற்றி பெறும்” – விசிக தலைவர் திருமாவளவன்.!

புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…

1 hour ago

“தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்” இதான் நடக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…

2 hours ago

ஆதவ் அர்ஜுனா விவகாரம்: ”விஜய் என்னுடன் தொலைபேசியில் பேசவில்லை” – எடப்பாடி பழனிசாமி.!

சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…

3 hours ago

அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் – தவெக தலைவர் விஜய் மரியாதை!

சென்னை : அஞ்சலை அம்மாள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கியமான வீராங்கனையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர். தமிழக…

4 hours ago