Rajinikanth - Jailer Movie [Image source : Sun Pictures]
நாளை மறுநாள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் உலகமெங்கும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இதனை வரவேற்க ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு முன்பதிவு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வழக்கமாக தனது திரைப்படம் முடிந்த பிறகு, குறிப்பிட்ட கால இடைவெளியில் இமயமலை செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் கடந்த சில வருடங்களாக ரஜினிகாந்த் இமயமலை செல்லவில்லை.
இந்நிலையில் நாளை மறுநாள் ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இன்று இமயமலை செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இன்று செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் பேசுகையில், 4 வருடங்களாக கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இமயமலை செல்லவில்லை. இந்த வருடம் தற்போது இமயமலை செல்ல உள்ளேன் என தெரிவித்தார்.
அடுத்ததாக நீங்கள் நடித்த ஜெயிலர் திரைப்படம் எப்படி இருக்கிறது என செய்தியாளர்கள் கேட்கவே, படம் எப்படி இருக்கிறது என நான் கூறினால் நன்றாக இருக்காது. அதனை நீங்கள் தான் பார்த்து சொல்ல வேண்டும் என கூறினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (மதிமுக) ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு தான் காரணம் இல்லை என்று மல்லை…
வாஷிங்டன் : விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இன்று சுபான்ஷூ சுக்லா குழுவினர் பூமிக்கு…
லார்ட்ஸ் : லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து…
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…