trisha [file image]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை த்ரிஷாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், இன்று (அக்டோபர் 5 ஆம் தேதி) வெளியாகவுள்ள ‘லியோ’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டிற்காக நடிகர் மற்றும் படத்தின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இதனிடையே, முதல் முறையாக இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளதாக கூறப்படும் நடிகை த்ரிஷாவின் முதல் பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில், த்ரிஷா பயத்துடனும் அதிர்ச்சியுடனும் காணப்படுகிறார், த்ரிஷாவை தாக்க முயலும் எதிரியை ஹீரோ தடுக்கையில் இரத்தம் தெறித்தது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் த்ரிஷா மீண்டும் இணையும் படத்தை இப்படம் குறிக்கிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மண்டமாக உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
லியோவில் விஜய்யை தவிர, அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலி கான், மேத்யூ தாமஸ் என பலர் நடிக்கும் இப்படத்திற்கு இசை அனிருத் இசையமைத்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…