மாநாடு பட வேளைகளில் இருக்கும் போதே மன்மத லீலை எனும் படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. அசோக் செல்வன் அந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் மாநாடு திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. சிம்புவுக்கு இது ஒரு மாஸ் கம்பேக் ஹிட் திரைப்படமாக அமைந்துள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு பெரிய ஹிட் திரைப்படமாக இது உருவாகியுள்ளது.
இந்த திரைப்படத்தை அடுத்து எந்த பெரிய ஹீரோவை வைத்து வெங்கட் பிரபு இயக்க உள்ளார் என்கிற பேச்சு கோலிவுட்டில் தீயாய் பரவி வருகிறது. இந்த வேளையில், தற்போது எந்த கதையும் அவர் முடிவு செய்யவில்லையாம்.
கொஞ்ச நாள் முன்னர் தான் அவருடைய தாய் இறைவனடி சேர்ந்தார். அவருடைய அஸ்தியை இன்னும் காரைக்காமல் வைத்துள்ளாராம். இனி அந்த சடங்குகளை மேற்கொள்ள உள்ளாராம். அதன் பிறகு, தான் அடுத்த கதை, ஹீரோ என செயல்பட தொடங்குவாராம் வெங்கட் பிரபு.
இதற்கிடையில், மாநாடு உருவாகி கொண்டிருந்த அதே வேளையில் மன்மத லீலை எனும் திரைப்படத்தையும் சத்தமில்லாமல் இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்த படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். இனி அந்த பட வேலைகளை முடித்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…
சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 26, 2025) தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வருகிறார். தற்போது…
சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…