விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த பீஸ்ட் திரைப்படம் இன்று அதிகாலை தமிழ்,தெலுங்கு,இந்தி,கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.
படத்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தை பார்த்துவிட்டு தங்கள் கருத்துகளை கூறி வருகிறார்கள் . ஒரு சில கலவையான விமர்சனங்களை படத்திற்கு வந்தாலும் விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ளது.
இந்நிலையில், பீஸ்ட் படம் வெளியானதை முன்னிட்டு, படத்தின் வெற்றிக்காகவும், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இன்று ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள ஒரு பாத்திரக்கடையில் பீஸ்ட் விஜய் சிலை ஒன்று 4 லட்சம் செலவில் வைக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து , கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்தைச் சேர்ந்த தீவிர விஜய் ரசிகர் வேல்முருகன் என்பவர் இவர் பிஸ்ட் திரைப்படம் வெற்றி பெற வேண்டி தியாகதுருகத்தில் உள்ள சிவன் கோயிலில் மொட்டை அடித்துள்ளார்.
மொட்டையடித்ததோடு, மட்டுமில்லாமல் அந்த கோவிலில் சிறப்பு பூஜைகளை செய்து சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். மொட்டை அடித்ததற்கு விமர்சனங்கள் வந்தாலும் அவர் அன்னதானம் வழங்கியுள்ளதால் பலர் அவரை பாராட்டி வருகிறார்கள்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…