லியோ படத்தின் 7 மணி காட்சிக்கு அனுமதி வழங்க இயலாது என தமிழக அரசு தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், முதலில் லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கு காட்சிகளை தொடங்க அனுமதி அளிப்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்கட்டும். இது தொடர்பாக, படத்தின் தயாரிப்பு நிறுவனம் அரசிடம் மனு அளிக்கலாம் என்று தெரிவித்த நிலையில், நேற்று மாலை லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவன தரப்பு வழக்கறிஞர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் அமுதாவை சந்தித்து 7 மணி சிறப்பு காட்சிகள் தொடர்பாக மனுவை வழங்கினர்.
Leo Morning Show: உள்துறை செயலருடன் லியோ படக்குழு சந்திப்பு!
தற்போது, 7 மணி காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை லியோ திரைப்படத்திற்கு காலை 7 மணி காட்சிகளுக்கு அனுமதிக்க முடியாது ஏற்கனவே, அரசாணை வெளியிட்ட படி 9 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என அரசு தரப்பில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
LeoFDFS: லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
காரணம், தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் 9 மணி காட்சிகளுக்கான டிக்கெட்களை ரசிகர்கள் வாங்கியுள்ள நிலையில், அதன் நேரத்தை மாற்ற முடியாது என்பதால் 7 மணி காட்சிகளுக்கு அனுமதிக்க முடியாது என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்கிடையில், புதுச்சேரியில் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு மாவட்ட ஆட்சியர் வல்லவன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் தலையீடு இல்லை
சினிமா விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டதில்லை என அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், லியோ திரைப்படத்திற்கு 5 சிறப்பு காட்சிகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு திரைத்துறையை முடக்கவில்லை, அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துகிறோம். லியோ திரைப்பட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என கூறியிருந்தார்.
லியோ
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். படம் வெளியாக இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், ப்ரோமஷன் பணிகள் ஒரு பக்கம் நடக்க, மறுபக்கம் படத்தின் டிக்கெட் புக்கிங் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…