Thangalaan [file image]
சென்னை : விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் கலவையான விமர்சனத்தையும், விக்ரம் நடிப்பு மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் இசை பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ திரைப்படம் ஆக 15-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, டேனியல் கால்டாகிரோன், பசுபதி மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியான தங்கலான் படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் டிவிட்டரில் தெரிவித்துள்ள விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.
படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன் ஒருவர் ” தங்கலான் படத்தில் க்ளைமாக்ஸ் காட்சி வரை சர்வதேச அளவிலான மேக்கிங் & பெர்ஃபார்மன்ஸ். திரைக்கதை மெதுவாக சென்றது. ஆனாலும், படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் நன்றாக இயக்கியுள்ளார். என கூறிள்ளார்.
மற்றோருவர் ” தங்கலான் படம் சினிமா மாஸ்டர் பீஸ் கதை கொண்ட படம். படத்தின் திரைக்கதை, வசனம், நடிப்பு ஜி.வி. இசை என எல்லாமே மிகவும் அருமை” என கூறியுள்ளார்.
மற்றோருவர் ” தங்கலான் படத்தின் முதல் பாதி கடந்து செல்லும் வகையில் இருக்கிறது. விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் நடிப்பு நன்றாக இருந்தது. ஜிவி பிரகாஷ் இசை நன்றாக இருக்கு. இடைவெளிக்குப் பின் கதை நகரவில்லை; உணர்வுபூர்வமான இணைப்பு இல்லை. பா ரஞ்சித் ஏமாற்றம் கொடுத்துவிட்டார்” எனவும் தெரிவித்துள்ளார்.
மற்றோருவர் ” விக்ரம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார், ஆனால் மோசமான எழுத்து காரணமாக படம் சரிந்தது. உணர்ச்சி ரீதியாக தொலைவில் உள்ளது மற்றும் இணைக்க முடியவில்லை. VFX காட்சிகள் பரவாயில்லை. விக்ரமின் திறமையை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான இன்னொரு வாய்ப்பை இழந்தது ஏமாற்றமளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…