5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

இந்த 8 நாள் பயணத்தின்போது, இந்தியா உடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க அந்நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

PMModi

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, தனி விமானம் மூலம் இன்று (ஜூலை 10) காலை டெல்லி திரும்பினார். டெல்லி விமான நிலையம் வந்த அவருக்கு அதிகாரிகள் வரவேற்பு வழங்கினர்.

இந்த பயணத்தின்போது, இந்தியா உடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க அந்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் பிரேசிலின் தலைமையில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றதும் இதில் அடங்கும்.

பிரதமர் மோடி ஜூலை 2 ஆம் தேதி கானாவின் தலைநகரான அக்ராவிற்கு சென்றார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு ஆப்பிரிக்க நாட்டிற்கு ஒரு இந்தியப் பிரதமர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.ஜூலை 3 ஆம் தேதி, பிரதமர் மோடி டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு பயணம் செய்தார். இது பிரதமராக கரீபியன் நாட்டிற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணமாக அமைந்தது.

ஜூலை 4 ஆம் தேதி பியூனஸ் அயர்ஸுக்கு விஜயம் செய்த பிரதமர் மோடி, அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலேயுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று முடிந்தது. சுற்றுப்பயணத்தின் நான்காவது கட்டமாக பிரதமர் மோடி பிரேசிலுக்கு சென்றார். அங்கு அவர் ஜூலை 6 முதல் 7 வரை ரியோ டி ஜெனிரோவில் நடந்த 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.

தனது சுற்றுப்பயணத்தின் இறுதிக் கட்டத்தில், பிரதமர் மோடி நமீபியாவுக்குச் சென்றார. நமீபியாவில் அவர் அந்நாட்டு அதிபர் டாக்டர் நெடும்போ நந்தி-நதைத்வாவைச் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார் மற்றும் நமீபியா நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அங்கு அவருக்கு நமீபியாவின் உயரிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்