UP Sentenced To Life For Killing 10 Dalits [FileImage]
உத்தரப்பிரதேசம்: 42 ஆண்டுகளுக்கு முன்பு தலித் சமூகத்தைச் சேர்ந்த 10 பேரைக் கொலை செய்த வழக்கில் 90 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா பிரிவின் ஃபிரோசாபாத் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், அவருக்கு 55,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதம் கட்டத் தவறினால், ஆயுள் தண்டனையுடன் 13 மாதங்கள் சேர்த்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிகோஹாபாத் காவல் நிலையப் பகுதியில் உள்ள சத்பூர் என்ற கிராமத்தில் 1981 டிசம்பரில் இந்தக் கொலைகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து மெயின்புரி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அக்டோபர் 1989-ல் ஃபிரோசாபாத் மாவட்டம் உருவான பிறகு, ஷிகோஹாபாத் ஃபிரோசாபாத் பகுதியாக மாறியது. இருப்பினும், இந்த வழக்கின் விசாரணை மெயின்புரி நீதிமன்றத்தில் தொடர்ந்தது நிலுவையில் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 2021-ல், இந்த வழக்கு ஃபிரோசாபாத் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், அதற்குள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் ஒன்பது பேர் இறந்துவிட்டனர். இதனால், எஞ்சியிருக்கும் ஒரே குற்றவாளியான கங்கா தயாளுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிபதி ஹர்வீர் சிங் புதன்கிழமை தீர்ப்பளித்தார்.
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஜூலை 1, 2025 அன்று…
ஆந்திரா : 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையின்…
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…